பிக்பாஸ் 2 வீட்டில் இன்னும் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை ரசிகர்களால் கணிக்கவே முடியவில்லை. வீட்டில் மிகவும் பாவப்பட்டவராக சுற்றி வருபவர் சென்ட்ராயன்.
சில போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் நிஜமாகவே இவர் இப்படி தானா இல்லை நடிக்கிறாரா என்ற சந்தேகம் கொஞ்சம் இருக்கிறது.
இந்த நேரத்தில் புதிய பிக்பாஸ் 2 புரொமோவில் NSK ரம்யா சென்ட்ராயனிடம், சில பேர் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று நினைக்கிறார்கள், உங்களை பாவமாக காட்டுகிறீர்கள் என்று கூறுகின்றனர். நிஜமாகவே இப்படி தான் என்றால் இருக்கலாம், அப்படி இல்லை என்றால் உண்மையை காட்ட வேண்டும் என்று படு கோபமாக அவரிடம் பேசுகிறார்.
அதற்கு முன் புரொமோவில் ரித்விகா, சென்ட்ராயன் அவர்கள் எனக்கு படிக்கவே தெரியாது என்று பெரிய கடிதத்தை எழுதியுள்ளார் என்று கூறுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/2uYmOj4vzT
— Vijay Television (@vijaytelevision) 18 July 2018