டெல்லி உயிரியல் பூங்காவில் இருக்கும் பிட்டு என பெயர் கொண்ட ஒரு ராயல் வங்க புலிக்குட்டிக்கு மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புலிகள் சாதாரணமாக மரங்களில் ஏறாது. ஆனால் டெல்லி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும்மிகவும் துருதுருவென இருக்கும் ஒரு வங்க புலி மரங்களில் ஏறி அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அதற்கு மூன்று மாதங்கள் கூண்டில் அடைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் பூங்காவில் வேலிகளுக்குள் சுதந்திரமாக சுற்ற அனுமதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அது மரத்தின் மேல் ஏறி, பார்வையாளர்கள் மீது தாவ பார்த்தது.
இதனால் 2வது முறையாக 3 மாதங்கள் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்நிலையில் பிட்டுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் பூங்கா நிர்வாகம் அதை கூண்டிலிருந்து வெளியே விட முடிவு செய்தது.
3வது முறை ஜெயில் :
இந்நிலையில், கூண்டை விட்டு வெளியே விடப்பட்ட அந்த பிட்டு இந்த முறை புலிகளை அடைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியில் ஏறி, பார்வையாளர்கள் பக்கம் தாவ பார்த்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பூங்கா நிர்வாகத்தினர். பிட்டுவை மீண்டும் கூண்டில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.