நவீனுடன் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வெளியிட்ட முதல் மனைவி… வெடிக்கும் சர்ச்சை

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிமிக்ரி கலைஞர் நவீன் குறித்து அண்மை காலமாக அடுத்தடுத்து சர்ச்சையான தகவல் வெளிவர ஆரம்பித்துள்ளது. நவீன் மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணாகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், திவ்யலட்சுமி என்ற பெண் நவீன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்துவிட்டதாகவும், தற்போது தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறி திருமணத்தை நிறுத்தினார்.

தற்போது, அந்த சர்ச்சைகளை அம்பலப்படுத்தும் விதமாக குரல் பதிவு ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், திருமணம் நடந்ததை நவீன் ஒப்பு கொண்டுள்ளார். அது மட்டும் இல்லை, அதற்காக நான் உன் காலில் விழுந்து மன்னிப்பு கோர வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இறுதியில் குதித்த பெண் கோடி ரூபாய் கொடுத்தாலும் விவகாரத்து கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலங்களின் பல குரல்களில் பேசும் திறன் கொண்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது.

இந்த குரல்பதிவு ரசிகர்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இன்றி நவீன் அண்மையில் இது குறித்து ரசிகர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டிருந்தார்.