நண்பரின் தாய் குளிப்பதை காணொளி எடுத்து மிரட்டிய இளைஞன்… நடந்தேறிய கோர சம்பவம்

ஹைதராபாத் மாநிலம் சந்தாநகர் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார்(21), கார் டிரைவர். இவரும், சம்பத் குமார்(23) என்பவரும் சிறு வயது முதல் நண்பர்களாம். இதனால் சம்பத் குமார் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவது வழக்கம்.

ஒருநாள் அப்படி வந்திருந்தபோது, பாத்ரூமில் சம்பத் குமாரின் தாய் குளித்துக்கொண்டிருந்தார். இதை கதவு வழியாக எட்டிப் பார்த்த அஜய் குமார் அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விடயம் எப்படியோ சம்பத் குமாருக்கு தெரியவந்தது. எனவே தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று, ஒரு பாரில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சம்பத் தனது ஸ்கூட்டரில் அஜயை ஏற்றிக்கொண்டு சந்தாநகர் பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கே வைத்து தனது தாய் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் குறித்து அஜயிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் போது சம்பத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை அஜயின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சுமார் 10 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதை அப்பகுதியினர் பார்த்து ஓடி வந்தனர். அதற்குள் சம்பத் குமார் தப்பியோடிவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஜய்குமார் இறந்துவிட்டார். அஜய் குமார் தந்தை டேனியல் அளித்த புகாரின் பேரில் சம்பத் குமாரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.