சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா இன்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக புகழ்பெற்றவர் பிரியங்கா.
கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது மன வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட கடந்த 2 மாதங்களாக கணவரை பிரிந்து சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
தனியாக வாழ்வது தனிமை அல்ல, நம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையே தனிமை என்ற வரிகளை கடைசியாக தனது வாட்ஸ் அப்பின் முகப்புப் பக்கமாக மாற்றியிருந்தார் பிரியங்கா.
தனிமையே அவர் கொலை செய்துகொள்ள முக்கிய காரணமாக இருந்துள்ளது என கூறப்படுகிறது.