யாழ். கைதடி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாதவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தினர். வாகனத்தைத் தீயிட முயன்றபோது வீட்டிலிருந்தவர்கள் சுதாரித்துக் குரல் எழுப்பியதை அடுத்து அவர்கள் தப்பியோடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.4 மோட்டார் சைக்கிளில் முகங்களை மறைத்தவாறு வந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.