ரஷ்யாவில் இருந்து பைப்லைன் வழியாக சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் விவகாரம் தொடர்பாக ஜேர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நேரடியாக குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், ராணுவத்துக்காக அந்நாடு மிக அதிகமாக செலவு செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஜேர்மன் இருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.
புருசெல்ஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ நோட்டோ’ நாடுகள் உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிக்கொண்ட பின்னர், இரு நாடுகளும் நல்ல ஒற்றுமையுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் புதிய தகவலாக டொனால்ட் டிரம்பின் தந்தை Fred Trump ஜேர்மனியில் பிறந்தவர் என கூறப்படுகிறது. டிரம்பின் தந்தை பிரபல தொழிலதிபர் ஆவார். ஜேர்மனியில் பிறந்த இவர் நியூயோர்க் நகரில் தன்னை ஒரு பெரிய தொழிலதிபராக நிலைநிறுத்தினார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் தொழிலதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் தாய் ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். இதன் காரணத்தினாலே தனக்கு ஐரோப்பிய நாடுகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுவார்.