விரைவில் சாத்தியமாகும் விண்வெளி வாழ்க்கை: ஆச்சரிய கண்டுபிடிப்பு

விண்வெளி முகவர்களும், தனியார் கம்பனிகளும் இன்னும் ஒருசில வருடங்களில் செவ்வாயில் மனிதர்களை குடியிருத்தி அதனை காலனிப்படுத்துவதற்குரிய நவீன திட்டங்களை ஏற்கனவே வகுத்துள்ளனர்.

புவி போன்ற அருகிலுள்ள கோள்கள் பற்றி மேற்கொள்ளப்பட்டுவரும் அதிகரித்துவரும் ஆய்வுகளுடன் இந்த விண்வெளிப் பணயமும் ஆச்சர்யப்படுவதற்குரிய ஒன்றாக கருதப்பட்டிருக்கவில்லை.

எது எவ்வாறாயினும் விண்வெளியில் நீண்ட காலம் மனிதன் வாழ்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இவ்வாறான விண்ணுலக பிரயாணத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் காரணிகளுள் ஒன்று விண்வெளி வீரர்கள் சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன் மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு சக்தியை வளங்க போதுமான அளவு எரிபொருள்.

எனினும் விண்ணுலகில் மிகக் குறைந்தளவே ஒட்சிசன் உள்ளதுடன் இடைப்பட்ட தூரமானது அதை மீள்நிரப்புவதையும் கடினடமுறச் செய்கிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று நீரிலிருந்து சுவாசிக்கவென ஒட்சிசனையும், எரிபொருளுக்கென ஹைட்ரஜனையும் வெறுமனே குறைகடத்தியையும், சூரிய ஒளியினையும் பயன்படுத்தி ஈர்ப்பு சக்தியில்லாத விண்வெளியில் பிரித்தெடுக்க முடியும் என வெளிப்படுத்தியுள்ளது. இது நீடித்த விண்வெளிப் பணயத்தினை மெய்ப்பிப்பதாக பார்க்கப்படகிறது.

எல்லைப்படுத்தப்படாத சூரிய வளத்திலிருந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையை வலுவூட்டுவதானது பெரும் சவாலாகவுள்ளது. காரணம் தற்போது நாம் சக்திக்கென எண்ணையைப் பயன்படுத்துவதிலிருந்து விலகி, புதுப்பிக்கக்கூடிய வளங்களை நோக்கி நகர்கிறோம்.

விஞ்ஞானிகளும் ஹைட்ரஜனை பயன்படுத்தி சக்தியைப் பெறும் முயற்சியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்குரிய சரியான வழி நீரை உடைத்து அதன் மூலக்கூறுகளாகப் பிரிப்பதே. இச் செயன்முறை மின்பகுப்பு எனப்படுகிறது.

இது மின்பகுபொருள் கொண்ட நீரினூடு மின்னோட்டத்தைச் செலுத்துவதால் அடையப்படுகிறது. விளைவாக ஹைட்ரஜனும், ஒட்சிசனும் உடைக்கப்பட்டு தனித்தனி மின்வாய்களில் விடுவிக்கப்படுகிறது.

இம்முறை தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமாயிருப்பினும், இன்னமும் பாவனையில் தயாராக வந்ததில்லை, காரணம் ஹைட்ரஜன் தொடர்பான மீள்நிரப்பும் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையே.

இவ்வாறு நீரிலிருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன், ஒட்சிசன் விண்வெளி ஓடங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். வழக்கத்திலுள்ள எரிபொருள், ஒட்சிசனைப் பயன்படுத்தவதிலும் பார்க்க நீரினைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கலாம், வெடிப்புக்கள் ஏற்படும் சாத்தியப்பாடு குறைவு.

மேலும் விண்வெளியில் இத்தொழில்நுட்பம் சாத்தியமாகும் பட்சத்தில் இங்கு உயிரின வாழ்க்கையை நிலைநிறுத்துவதிலும், இலத்திரனியல் சாதனங்களை இயக்குவதிலும் பெரும் துணை நிற்கும்.

இது இருமுறைகளில் மேற்கொள்ளப்படலாம், ஒன்று பூமியில் மேற்கொள்ளப்படுவது போன்று மின்பகுப்பு. இதன்போது மின்பகுபொருள் மற்றும் சூரிய சக்தியை பெறவென சூரியக் கலம் பயன்படுத்தப்படுகிறது.

மற்றையது ஒளியூக்கிகள், இவைகள் ஒளிக்கதிரிலுள்ள போட்டோன்களை நீரினுள் அமிழ்த்தப்பட்டுள்ள குறைகடத்திகளினுள் அகத்துறிஞ்சுவதன் மூலம் செயற்படுகின்றன.

மேற்படி குறைகடத்தி போட்டோனிலுள்ள சக்தியை அகத்துறிஞ்சுவதன் மூலம் அதனை விட்டு வெளியேறுகிறது, இதனால் அவ்விடத்தில் துளை உருவாகிறது.

இவ்விலத்திரன் நீர் முலக்கூறகளிலுள்ள புரோத்தன்களுடன் தாக்கவல்லது. விளைவாக ஹைட்ரஜன் விடுவிக்கப்படுகிறது. இதேநேரம் துளையானது இலத்திரன்களை கவர்ந்து ஒட்சிசனை விடுவிக்கின்றது. இது மீள்தாக்கமாகவும் நிகழக்கூடியது.

இவ் ஒளிப்பகுப்பு/ ஒளியூக்கிச் செயன்முறையானது விண்வெளிக்க மிகச்சிறந்த முறையாகும். காரணம் உபகரண அமைப்பு மின்பகுப்பு முறையிலும் செவவு குறைந்ததாயிருப்பதுடன் விண்வெளியில் புவியிலும் அதிகமான ஒளிச்செறிவு இருப்பதாலாகும்.

ஆய்வில் விஞ்ஞானிகள் ஈர்ப்பு குறைந்த பகுதியில் ஒளிப்பகுப்பு செயன்முறைக்கென முழு பரிசோதனை அமைப்பை மேற்கொண்டிருந்தனர். விழும் நீர்த்துளி புவியீர்ப்பு விசையினால் ஆர்முடுகும் போது அதற்கு சமனான எதிர் ஆர்முடுகல் விசை பிரயோகிக்கப்பட்டு ஈர்ப்பின் தொழிற்பாடு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இவ் அணுகுமுறை நீரினை உடைப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு சாதகமான வாய்ப்புகளைத் தந்திருந்தது. நீர் உடைந்து வாயுக்களைத் தோற்றுவித்திருந்தது, இவை குமிழிகளைத் தோற்றுவித்திருந்தன. எனினும் பூச்சிய ஈர்ப்பு மண்டலத்தில் உருவாகிய நுரைகள் நீர் மேற்பரப்பை சென்றடையும் வாய்ப்பின்றி ஊக்கியைச் சூழ்ந்து காணப்பட்டது. இது மேலும் வாயுக்கள் உருவாவதை தடுத்தது. இதற்கென ஊக்கிகளில் பிரமிட் போன்ற பகுதிகளை உருவாக்கி மேற்படி குமிழிகள் விடுவிக்கப்பட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

என்னதான் ஊக்கிகளிலிருந்து அவை விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவை நீர்மேற்பரப்பில் செறிவடைந்திருந்தன.

பூச்சிய ஈர்ப்பில் தோன்றிய வாயுக்கள் நீர்மேற்பரப்பை அடையாமல், கலவையிலிருந்து பிரிக்கப்படாமல் காணப்பட்டது. பதிலாக நுரைகளை தோற்றுவித்தது. இது கணிசமான அளவில் வினைத்திறனை குறைத்திருந்தது. இது ஊக்கிகளைச் சூழ்ந்து மேலதிக தாக்கங்கள் உருவாவதைத் தடுத்தது.

இம்முறையை திறம்பட விண்வெளியில் பயன்படுத்த வேண்டுமெனில் சுழற்சியால் உருவாகும் மையநீக்கு விசை போன்ற இயந்திரவியல் தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டியிருக்கும். எனினும் இம்முறை மூலம் விண்வெளி வாழ்க்கை இன்னும் குறுகிய காலத்தில் சாத்தியமாகும் என்பதில் ஜயமில்லை.