காலையில் எழுந்ததும் இதை குடித்திடுங்கள்!

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையால் பலரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள், ஆனால் அதில் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன.

இதிலுள்ள கரையும் நார்ச்சத்துகள் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்தநீர் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

அத்துடன் பெருங்குடல் சிறப்பாக இயங்கவும் துணை புரிகிறது.

தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும், இதனை காலையில் எழுந்து பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இதன் பயன்கள்
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
  • உடல் குளுமை அடைவதுடன், எலும்புகளும் வலிமை பெறும்.
  • எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த நீரை தினமும் அருந்தலாம்.
  • இதிலுள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கின்றன.
  • சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், மலச்சிக்கல் தீரும்.
குறிப்பு

சிறுநீரகம், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் வெண்டைக்காயை குறைவாக சாப்பிட வேண்டும்.

சமைக்கும் போது வெண்டைக்காயை அதிகம் வதக்கக்கூடாது, இது கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்துவிடும், லேசாக வதங்கியதும் இறக்கிவிடுவது நல்லது.