இது மட்டும் நடந்தால் பாலாஜியுடன் ஒன்று சேருவேன்: நித்யா

நடிகர் தாடி பாலாஜியுடன் மீண்டும் இணைவது குறித்து அவர் மனைவி நித்யா பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நித்யா பல்வேறு பரபரப்பு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

கணவர் பாலாஜியுடன் நித்யா இணைந்துவிட்டார் என்பது போல காட்டப்பட்ட நிலையில் அது உண்மையில்லை எனவும், அவருடன் விவாகரத்து நிச்சயம் எனவும் நித்யா கூறினார்.

இந்நிலையில் பாலாஜியுடன் இணைவது குறித்து புதிய பேட்டியில் நித்யா பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து, பெண் என்பதை விட ஒரு அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய ஸ்பேஸ் கொடுத்தாலே நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாகிவிடுவோம் என கூறியுள்ளார்.