இந்தியா – புதுடெல்லியில் நேரடி ஒளிபரப்பின் போது பெண் வக்கீல் ஒருவரை மவுலானா இஜாஸ் அர்ஷாத் கஸ்மி என்பவர் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸீ இந்துஸ்தான் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமையன்று மாலை விவாதம் ஒன்று நடைபெற்று கொண்டு இருந்த போது நிழச்சியில் மவுலானா இஜாஸ் அர்ஷத் கஸ்மி என்பவர் பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்தார்.
இது குறித்து தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் மவுலானாவை கைது செய்தனர்.
மவுலானா அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் . முத்தலாக் விவகாரத்திற்காக எதிராக போராடும் வக்கீல் பராஹ் பைஸை செவ்வாய்க்கிழமை மாலை ஒரு விவாதத்தின்போது தொலைக்காட்சி நேரலையில் தாக்கினார்.
முத்தலாக் குர்ஆனில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து அல்ல என வக்கீல் பராஹ் பைஸ் வாதிட்டார். இது மவுலானாவுக்கு வக்கிலுக்கும் இடையே சண்டையை தூண்டியது.
இதனால் ஆவேசம் அடைந்த மவுலானா பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்தார் என்பதே தொலைக்காட்சி நிர்வாகத்தின் முறைப்பாடு
தற்போது இந்த வீடியோ காட்சி டுவிட்டரில் வைரலாகி உள்ளது மவுலானாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.