3 பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்! கதறும் பிள்ளைகள்

கிளிநொச்சி, தரமபுரம் பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கல்மடு ஏரியில் மிதந்து கொண்டிருந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.நேற்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கரவெட்டியில் இருந்து கல்மடு ஏரியில் மீன் பிடிப்பதற்கு சென்ற 63 வயதுடைய சுந்தரம் புலேந்திரன் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீன்பிடிக்க சென்று மீண்டும் வீடு வந்து சேராமையினால் உறவினர்கள் இது தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.

பின்னர் அந்த ஏரிக்கு வந்த மக்கள் சடலம் ஒன்று மிதந்ததனை அவதானித்து தர்மபுரம் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து சோதனையிட்ட போது காணாமல் போன சுந்தரத்தின் சடலம் என கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 3 பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் பிள்ளைகள் தந்தையை பார்த்து கதறி அழுகின்றனர்.எனினும் உயிரிழந்தமைக்கான உரிய காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.