”பணத்திற்கு சட்டம் அடிபணியும்” கடிதம் எழுதி வைத்து விட்டு ரயிலில் குதித்து இளைஞன் தற்கொலை!!

பணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.வெயங்கொட மற்றும் ஹிந்தெனியவுக்கு இடையிலான ரயில் வீதியில் வைத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.‘பணத்திற்கு சட்டம் அடிபணியும். எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. நான் செய்யாத தவறுக்கு என்னை சிறையில் அடைத்தார்கள். அது வருத்தமாக உள்ளது’ என குறித்த இளைஞர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.வெயங்கொட கரஸ்னாகல பிரதேசத்தை சேர்ந்த சஜித் ரொஷான் சமரப்புலி என்ற 25 வயதான திருமணமாகாத இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்பஹா திடீர் மரண பரிசோதகர் முன்னிலையில் மரண விசாரணகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.