மசாலா மீன் குழம்பு
மீன் – 1 கிலோ
சிறிய வெங்காயம் – 1 கப்
பூண்டு – 10 பல்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு – 1ஸ்பூன்
மஞ்சள் – 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணை – 1 கப்
புளி 2 எலுமிச்சை அளவு
மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள் :
தேங்காய் – 1
வரமிளகாய் – 20
கொத்தமல்லி -1 கை அளவு
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 20
கறிவேப்பிலை கொஞ்சம் இவை அனைத்தையும் எண்ணை விட்டு நன்றாக வருத்து அரைத்து கொள்ளவும் .
செய்முறை :
1.வாணலியில் எண்ணை விட்டு அது காய்ந்ததும் அதில் கடுகு வெந்தயம் , கறிவேப்பிலை , வெங்காயம் , பூண்டு போட்டு வதக்கி அதில் அரைத்த மசாலா ,மஞ்சள்தூள் , உப்பு , புளி தண்ணீர் , கொஞ்சம் வெல்லம் , இவை அனைத்தையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும் .
2.குழம்பு நன்றாக கொதித்து தீக் ஆனவுடன் அதில் மீனை போட்டு இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் 5 நமிடம் வைத்திருந்து இறக்கவும் .
குறிப்பு :
1.மசாலா வருக்கும் போது கடைசியாக தான் தேங்காய் போட வேண்டும் . தேங்காய் போட்டு 2 நிமிடம் வதக்கினால் போதும்.