யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர், தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக யாழ்ப்பாண காவற்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட காவற்துறை அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் 2 முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும், வடக்கிற்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.