ஹாரியானாவில் வேலை தேடி சென்ற பெண்ணை விடுதியில் அடைத்து வைத்து 40 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாரியானா மாநிலம் பஞ்சகுலாவில் 22 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி சென்றுள்ளார். அங்கு அவரை சிலர் விடுதியில் அடைத்து வைத்து சுமார் நான்கு நாட்களாக 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் ஒருவனை அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்த நபர் என்றும் அந்த நபர் தான் தனக்கு அந்த விடுதியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் இரண்டு நபர்களை உடனடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.