பாரம்பரியம் தொட்டு பெண்களுக்கு திருமணமான உடன் காலில் மெட்டி போடுவதை ஒரு சடங்காக செய்து வருகின்றனர். இந்த மெட்டியை பெண்ணின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் அணிகின்றனர். இந்த முறைக்கு பின்னாடி பல காரணங்கள் கூறப்படுகிறது.
அழகுக்காக,தீய சக்தி அண்டாமல் இருக்க, குணப்படுத்தும் ஆற்றலுக்காக, திருமணமான அடையாளமாக என்று பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.
வெள்ளி மெட்டி
இது பூமியில் உள்ள போலார் ஆற்றலை உறிஞ்சி உடம்பு முழுவதுக்கும் பாய்ச்சுகிறது. இன்று சில பெண்கள் தங்கத்தில் மெட்டி அணிகிறார்கள். ஆனால் காலில் மெட்டி அணிய சிறந்த உலோகம் வெள்ளி தான் என்பது முன்னோர்கள் கூறியதை நாம் மறந்துவிடக் கூடாது.
கருப்பை வளம்
காலில் மெட்டி அணிகின்ற விரல்களின் நுனிகளில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இதனால் பெண்கள் நடக்கும் போது மெட்டி அழுத்தத்தை ஏற்படுத்தி பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும் அங்கே இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு பெண்களின் மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியமாக இருக்கவும், கருப்பை ஆரோக்கியமாக இருக்கவும் இந்த அழுத்தம் உதவுகிறது. இந்த அழுத்தம் பெண்களின் இனப்பெருக்க மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்கிறது.