உக்ரைன் நாட்டில் கல்லறை ஒன்றில் இருந்து காதல் ஜோடிகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.
ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஆச்சரியம். ஏன் என்றால் அந்த ஜோடி எலும்புக்கூட்டில் பெண்ணின் எலும்புக்கூடு என்று கூறப்படும் அமைப்பு இருந்த விதம் மிகுந்த ஆச்சரியத்தை தொற்றுவித்துள்ளது. ஜோடியாக கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகளை உடனடியாக ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த எலும்புக்கூடுகளை பரிசீலித்ததன் அடிப்படையில் “இவர்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கணவன், மனைவியாக இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் Vysotskaya, Wysocko என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என்றும் கூறும் அவர்கள், அந்த காலத்தில் கணவன், மனைவிக்கு என்று தனித்தனி வரையறைகள் இருந்திருக்கின்றன என்றும் சில தகவல்களை கூறியுள்ளனர்.
குறித்த எலும்புக்கூடுகள் இரண்டும் இருந்த அமைப்பை பார்க்கும்போது, இறந்த கணவனை விட்டுப் பிரிய மனம் இல்லாததாலும் அடுத்த பிறவியில் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்திலும் இந்தப் பெண் கணவனுடன் சேர்ந்து உயிர் துறக்க முடிவு செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வலி இல்லாமல் உயிர் போகக்கூடிய விசமொன்றை அருந்தி கணவன் உடலுக்கு அருகில் படுத்து, கணவனின் தலைக்கு அடியில் வலது கையை வைத்து, முகத்தைத் தன் முகத்தோடு உரசிக்கொண்டு, கால்களைக் கணவன் மீது போட்டு, இடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்திருக்கிறார்.
இந்த கல்லறையில் இருந்த பெண்ணின் எலும்பு கூடு அமைந்திருந்த விதம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த நிலையில் இந்த காரியத்தை குறித்த பெண்ணே விரும்பிச் செய்திருக்கிறார் என்ற முடிவுக்கு தாம் வந்துள்ளதாக கூறும் ஆராச்ச்சியாளர்கள், கட்டாயத்தின்பேரில் இப்படி ஒரு நெருக்கத்தைக் கொண்டுவர முடியாது” என்றும் அந்த ஆராச்ச்சியாளர்கள் சிலாக்கலித்துள்ளார்கள்.