நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று கூறிய கருத்து தொடர்பாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையின் போதே, காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டனர்.
விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் சிறிலங்கா காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
எனினும், சபாநாயகரின் அனுமதியுடனேயே விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதால், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.