றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடந் ஜூன் 24ஆம் நாள், றிவிர இதழில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாகவே நேற்று திஸ்ஸ ரவீந்திர பெரேராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே, அவரிடம், நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், 2.15 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டன.
ஒட்டுசுட்டானில் கடந்த ஜூன் 22 ஆம் நாள், கைப்பற்றப்பட்ட கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை சம்பந்தமாக வெளியிடப்பட்ட செய்தி குறித்தே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.