முகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லா பிரச்சனைகளுக்கும் கடுக்காய் எனும் ஒரே காயின் மூலம் தீர்வு பெறலாம்.
கடுக்காயை பொடி செய்து உபயோகிப்பதன் மூலமாக கூந்தல், உடல் ஆரோக்கியம், முக அழகு உள்ளிட்ட பல பராமரிப்பு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
Hair Pack
கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி, ஆம்லா பொடி 2 தேக்கரண்டிகள், கருவேப்பிலை ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர், இதனை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இந்த கலவையை தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவ வேண்டும். ஒரு மணிநேரம் இந்த Hair Pack-ஐ தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு Shampoo போட்டு தலையை அலச வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முடியில் உள்ள பொடுகு, பேன் என அனைத்து பிரச்சனைகளும் நீங்குவதுடன், முடி உதிர்வதும் தடுக்கப்படும்.
கடுக்காய் எண்ணெய்
கடுக்காயை உடைத்து, அதிலிருந்து கொட்டையை நீக்கிவிட்டு அதனை தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்க வேண்டும். மிதமான சூட்டில் இவற்றை பழுப்பு நிறம் வரும் வரை சூடு செய்ய வேண்டும்.
அல்லது கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெய்யில் கலந்து, 3 நாட்கள் வெயிலில் வைத்து பிறகு தலை குளிப்பதற்கு முன்பு இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் முடி உதிர்வது தடுக்கப்பட்டு, மென்மையடையும்.
இளநரையை சரிசெய்ய உதவும் கடுக்காய்
கடுக்காய் பொடியை ஒரு தேக்கரண்டியும், ஆம்லா பொடியை 2 தேக்கரண்டியும், கருவேப்பிலை பொடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் சூடு செய்த 4 தேக்கரண்டி நல்லெண்ணெய்யை எடுத்துக் கொண்டு, அதனுடன் இந்த கலவையை சேர்த்து Paste போல செய்துகொள்ள வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை இந்த Paste-ஐ தேய்த்துக் கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். இதன்மூலம் இளநரை ஓடிவிடும். மேலும், தலைமுடி கரு கருவென வளரும்.
உடல் எடை குறைப்பு
கால் அளவு தேக்கரண்டி கடுக்காய் பொடியை எடுத்து, அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கச்சிதமாக இருக்கும். மேலும், ஒரு தம்ளர் மிதமான சுடு தண்ணீரில் கால் தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கியும் தினமும் குடிக்கலாம். இதன்மூலம், செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமடையும்.
மேலும், மலச்சிக்கல் போன்ற உடல் கோளாறுகளையும் இது சீர்படுத்தும்.
ஜீரண சக்தி அதிகரித்தல்
கடுக்காயின் தோல்களை எடுத்துக் கொண்டு சிறிதளவு இஞ்சி, புளி, மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து துவையல் போல செய்து சாப்பிட வேண்டும்.
இதன்மூலம் ஜீரண பிரச்சனைகள் குணமடையும். மேலும் உடலுக்கு அதிக பலம் கிடைப்பதுடன், மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
கொழுப்பு கரைதல்
அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி, அரை தேக்கரண்டி தான்றிக்காய் பொடி, ஒரு தேக்கரண்டி ஆம்லா பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை கொள்ளு ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பிட வேண்டும்.
இதன்மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து நோயற்ற உடலை பெறலாம்.
இருமல்
அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை, தேனில் கலந்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குணமடையும். இந்த பொடியை வெதுவெதுப்பான தண்ணீரிலும் கலந்து குடிக்கலாம்.
இதனை செய்யக் கூடாது
- கடுக்காயை கர்ப்பமாக உள்ள பெண்கள் எடுத்துக் கொள்ள கூடாது.
- கடுக்காயின் மேல் உள்ள தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் உள்ளே இருக்கும் கொட்டைகளை பயன்படுத்த கூடாது.
- கடுக்காய் பொடியை நீரில் கலந்து சூடுபடுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கலந்து குடிக்க வேண்டும்.
- சர்க்கரை நோயாளிகள் கடுக்காயை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும்.
- அதிகளவில் கடுக்காயை பயன்படுத்தாமல் குறிப்பிட்ட அளவே பயன்படுத்த வேண்டும்.