இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி செல்லும் சிறுமியொருவரை உறவுக்கார இளைஞரான 19 வயதுடைய சவுரவ் என்பவர் காதலித்து வந்துள்ளார்.
தனக்கு படிப்பு முக்கியம் என சிறுமி கூறிவிட்டவே, குறித்த அச்சிறுமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய சவுரவ் , இன்னொரு நண்பருடன் சேர்ந்து, சிறுமியை கடத்தியுள்ளார்.
பின்னர் அங்குள்ள ஏரியில் வைத்து சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் சிறுமி இறந்துவிட்ட நிலையில், சடலத்துடன் சவுரவும், அவரின் நண்பரும் உறவு கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்து இரு தினங்கள் கழித்து பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது சவுரவ் மற்றும் அவரின் நண்பர்தான் கொலையாளிகள் என்பதை உறுதி செய்த பொலிசார், சவுரவின் நண்பரை தற்போது கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சவுரவை தேடி வருகிறார்கள்.