தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 500 கிராம்
சின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி 1/2 இன்ச் ( அம்மி கல்லில் நன்கு நசுக்கியது )
பூண்டு 20 ( அம்மி கல்லில் நன்கு நசுக்கியது )
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
வரமிளகாய் 10 ( பொடியாக நறுக்கியது )
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சம்பழ சாறு 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலைகள் 2 மேஜைக்கரண்டி
செய்முறை
1. நாட்டுகோழியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2. நாட்டுக்கோழியில் உப்பு, எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் பிரஷர் குக்கரில் நாட்டுகுகோழி கலவையை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி வைக்க வேண்டும்.
3. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். அதில் நசுக்கி வைத்துள்ள பூண்டையும் , இஞ்சியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அது கூழ் போல் ஆகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
5. வேகவைத்துள்ள அரை வேக்காடு நாட்டுக்கோழியை வடச்சட்டியில் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் உப்பு தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் நாட்டுக்கோழி சாறை பிரஷர் குக்கரில் இருந்து ஊற்றவும். நன்கு கொதிக்க வைத்து நாட்டுக்கோழி வெந்துள்ளதா என்று சரி பார்த்து கொள்ளவும்.
6. இப்பொழுது தீயை அதிக படுத்தி நாட்டுக்கோழி சாறை வற்றி விட வைத்து நாட்டுக்கோழி ஃட்ரை ஆகும் சமயத்துல நெய்யை சேர்க்கவும். பின்னர் நன்கு நாட்டுக்கோழியில் இருக்கும் ஈரப்பதம் வற்றி ஃட்ரை ஆகும் வரை வதக்கவும்.
7. நாட்டுக்கோழியின் நிறம் ஃப்ரொவுன் கலர் வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.