இன்றைய ராசிபலன் (23/07/2018)

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். அமோகமான நாள்.

  • கடகம்

    கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத் துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

  • கன்னி

    கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • துலாம்

    துலாம்:  மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார் கள். வாகனம் தொந்தரவு தரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்-. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மகரம்

    மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிம்மதி கிட்டும் நாள்.