இறுதி யுத்தத்தில் நின்றவர்கள் தொடர்பில் வெளியானது இரகசிய அறிக்கை!

2009ம் ஆண்டில் இலங்கையின் பாதுகாப்பு படையினர் பாரிய அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இது விடயத்தில் பொறுப்புக்கூறல் என்பது பூச்சியமாகவே உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முன்னரங்கப் மோதல் நிலைகளில் ஈடுபட்டவர்களை அமைதிகாக்கும் படையணிகளில் உள்வாங்கும் போது, குற்றமிழைத்தவர்களையும் இழைக்காதவர்களையும் வடிகட்டி வேறுபடுத்தும் ஒரு நடைமுறையை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்த போதும் அது தோல்விகண்டுவிட்டதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பினரால் தயார் செய்யப்பட்ட இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மாலி, லெபனான், டாபூர் மற்றும் தென் சூடான் ஆகிய மோதல் வலயங்களில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இருந்தபோதிலும் 2016ம் ஆண்டில் இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவர் மேற்கு சூடானின் டாவூர் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் மற்றுமொருவர் மோதல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் தென் சூடான் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முன்னரங்கப் மோதல் நிலைகளில் ஈடுபட்டவர்களை அமைதிகாக்கும் படையணிகளில் உள்வாங்கும் போது, குற்றமிழைத்தவர்களையும் இழைக்காதவர்களையும் வடிகட்டி வேறுபடுத்தும் ஒரு நடைமுறையை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்த போதும் அது தோல்விகண்டுவிட்டதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இறுதிப்போரின் போது பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது இலக்கு வைக்கப்பட்ட தொடர் தாக்குதல்கள் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உட்பட சர்வதேச மனிதாபினமானச் சட்டங்கள் மிகவும் பாரதூரமான வகையில் மீறப்பட்டதான தகவல்கள் வெளியாகியிருந்தன.

“இதேவேளை ‘2009ம் ஆண்டில் இலங்கையின் பாதுகாப்பு படையினர் பாரிய அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இது விடயத்தில் பொறுப்புக்கூறல் என்பது பூச்சியமாகவே உள்ளது.

மாறாக குற்றஞ்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் யுத்தக் குற்றவாளிகள் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு புகழ்மிக்கதும் அதிக வருமானமீட்டக்கூடியதுமான ஐ.நா. பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூக்கா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்துவை தொடர்பு கொண்டு வினவியபோது போர்க்குற்றச்சாட்டுக்களில் இராணுவம் ஈடுபட்டதாக கூறப்படுவதை தாம் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் ஒருவர் படைத்தரப்பில் இருக்க அருகதை இல்லாதவர் என அவர் கூறினார். போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக தகுந்த சான்றுகளுடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமானால் அதுபற்றி விசாரணை நடத்துவதற்கு இராணுவம் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இறுதியுத்தத்தில் மனித நேய நடவடிக்கையிலேயே இராணுவம் ஈடுபட்டதாக கூறும் அவர் பொதுமக்களைக் கொல்லுகின்ற அன்றேல் அவர்களை இலக்குவைக்கின்ற எவ்விதமான செயலிலும் கொள்கையளவில் இராணுவம் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.