புஸ்ஸல்லாவ – டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவில் சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த சிலை நாகலிங்கம் போன்று காட்சியளித்தாலும் படமெடுக்கும் நாகத்தின் தலையில் சிவலிங்கம் ஒன்று காணப்படுகின்றது.அந்த வகையில் 5 தலை நாகப் பாம்பு ஒன்று சிவனுக்கு குடைபிடிக்கும் தோற்றத்தில் காணப்படுகின்றது.சிலை காணப்பட்ட இடத்தில் பழமை வாய்ந்த நாகப் பாம்பு ஒன்று தற்போதும் குடி கொண்டுள்ளது.பாம்பு இருக்கும் குகைக்குள் மாணிக்க கற்கள் இருப்பது போன்ற வெளிச்சங்கள் தென்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவில் ஆற்றங்கரையில் காணப்படும் இராமர் ஆலயத்தில் தற்போது இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.மார்கழி மாதத்தில் தொடர்ந்து 30 நாட்கள் பஜனை குழுவினர் வீடு வீடாக செல்லும் போது திரிசூலம் வடிவிலான கம்பத்தை தூக்கி செல்வார்கள்.இந்த திரிசூலம் வடிவிலான கம்பத்தை தூக்கி செல்பவர் யார் என்பதை நியமிக்கும் செயற்பாட்டை கம்பம் பாலித்தல் என்பார்கள்.பொது மக்களினால் இரகசியமாக வைக்கப்படும் ஒரு தெய்வீக பொருளை கம்பம் தூக்குபவர் சுவாமி ஆடி அந்த இடத்தை சரியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கூறுபவரே அந்த கம்பத்தை தூக்கி செல்வார்.கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட இந்த இந்த சிலையை பார்வையிடுவதற்கு பலர் வருகைத்தந்தவண்ணம் உள்ளதாக கூறப்படுகின்றது .அந்த வகையில் டெல்டா தோட்டத்தில் இராமர் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்ற போது எஸ்.ரசிண்டன் என்பவரினால் ‘இரவு வேளையில் தான் ஒரு அதிசயத்தை காட்டவுள்ளதாக’ கூறி ஆலயத்தின் அருகில் இருக்கும் பாரிய பாலத்திற்கு கீழ் சென்று குறித்த சிவ நாகலிங்கத்தை மீட்டெடுத்து வந்துள்ளார்.சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிலை வைக்கும் பீடம் ஒன்றும் காண்படுகின்றது.அதேவேளை ஆற்றில் காணப்படும் பெரும்பாலான கற்கள் சிவலிங்க வடிவிலேயே காணப்படுகின்றன.இதனை பார்வை இடச்செல்பவர்கள் அங்கிருக்கும் நாகப் பாம்பிற்கு தொந்தரவு செய்யக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றார்கள்.