கமல்ஹாசனை திருமணம் செய்துகொள்ளவிருந்த நடிகை ஸ்ரீதேவி: பிளாஷ்பேக்

திரையில் ஒரு சில ஜோடிப்பொருத்தம் நன்றாக இருந்தால் அவர்கள் நிஜத்திலும் இணையவேண்டு என ரசிகர்கள் கொண்டாடுவதும், அவர்கள் குறித்த கிசுகிசுக்கள் வருவதும் வழக்கமான ஒன்று.

இதில், சில ஜோடிக்கள் திரையில் இணைந்தது போன்று நிஜத்திலும் இணைவார்கள். ஓரு சில ஜோடிகள் கிசுகிசுக்களோடு நிறுத்திக்கொள்வார்கள்.

அப்படி, 80 களில் ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது கமல்- ஸ்ரீதேவியின் ஜோடிப் பொருத்தம் . ஸ்ரீதேவியின் முதல் படம் கமல்ஹாசனுடன் அமைந்தது. இதன் காரணத்தினாலேயே இவர்கள் இருவரின் நடிப்பில் அந்நியோன்யம் மற்றும் வசீகரம் இருந்த காரணத்தால் இவர்கள் இருவர் குறித்து சினிமா துறையில் கிசுகிசு கிளம்பியது.

பிஸியான நடிகையாக இருந்த ஸ்ரீதேவியிடம் அவரது தாயார், உன்னை பற்றி சில செய்திகள் வருகிறதே அது உண்மையா என கேட்பாராம், அதற்கு ஸ்ரீதேவியும் அப்படியெதுவும் கிடையாது என பதில் சொல்வாராம்,

கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க ஸ்ரீதேவியின் தாயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், என்ன, கமல்ஹாசனை கல்யாணம் பண்ணிக்கப்போறியா? என்று நேரடியாக கேட்டுவிட்டார்.

ஆனால், அதனை காதில் வாங்கிகொள்ளாத ஸ்ரீதேவி, கோலிவுட்டை விட்டு பாலிவுட் சென்று பிரபலமாகி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

27 படங்களில் நானும், ஸ்ரீதேவியும் ஒன்றாக நடித்த காரணத்தால், எங்களுக்குள் நிஜத்திலும் காதல் இருப்பதாக ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது. நானும், ஸ்ரீதேவியும் திருமணம் செய்துகொள்வோம் என சந்தேகப்பட்டார் ஸ்ரீதேவியின் தாயார் என கமல் பின்னாளில் ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.