பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
எல்லா பழங்களும் அதிக சர்க்கரை அளவு கொண்டது அல்ல. சிலவகை பழங்கள் குறைந்த அளவு சர்க்கரையை கொண்டுள்ளன.
தற்போது பப்பாளி பழத்தினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பது குறித்து இங்கு காண்போம்.
- பப்பாளியில் எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இது உடலின் செயல்பாட்டை சமநிலையில் வைக்க உதவும். பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் A, B, C மற்றும் E ஆகியவை உடலுக்கு அதிக வலுவை தர கூடியவை.
- அதிக நார்ச்சத்துக்கள் இதில் உள்ளதால் செரிமானம் சீராக நடக்கிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் பப்பாளி குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட்டால், பப்பாளியில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் உடலின் மெட்டபாலிசத்தை சரியான முறையில் நடைபெறும்.
- எனவே பப்பாளி சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு தராது. இதில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் ஒரு கப் அளவிற்குள் பப்பாளியை சாப்பிடலாம். இதன்மூலம், உடலின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
- மேலும், பப்பாளியுடன் சிறிதளவு தயிர் சேர்த்து சாப்பிட்டால் Hyperglycemia போன்ற நோய்களை குணப்படுத்தும். எனவே சிறிதளவு பப்பாளி சாப்பிடுவது நல்லது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு இயல்பாகவே அதிக பசி எடுக்கும். அந்த வேளைகளில் தேவையற்ற கொழுப்பு உணவுகளை தவிர்த்து, பப்பாளியை சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியம் கெடாமலும், சர்க்கரையின் அளவு உயராமலும் இருக்கும்.
- பப்பாளியுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்தால் அதன் சுவை அதிகரிக்கும். பப்பாளி சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். மேலும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் வீக்கம் எளிதில் சரியாகிவிடும். பப்பாளி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.