சிறிலங்காவில் அரச நிகழ்வு ஒன்றில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அரசாங்க நிகழ்வுகளில் முதலில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். அதன் பின்னரே, ஏனைய நாட்டின் தேசிய கீதம் பாடப்படும்.
எனினும், கடந்த சனிக்கிழமை பொலன்னறுவவில், நடந்த நிகழ்வு ஒன்றில் இந்த நடைமுறைக்கு மாறான வகையில், முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்விலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் உதவியுடன், அமைக்கப்படவுள்ள 200 படுக்கைகளைக் கொண்ட சிறுநீரக நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே சீனாவின் தேசிய கீதத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.