நீண்ட காலமாக நாம் தவறாக செய்து வரும் பழக்கங்கள்!.. நிச்சயம் அதிர்ச்சியடைவீங்க

தவறு யார் தான் செய்வதில்லை… ஒரே செயல் சிலருக்கு சரியாகும், சிலருக்கு தவறாகவும் தெரியலாம். இது இயற்கை. இந்த உலகில் தவறே செய்யாதவர் என்று யார் ஒருவரும் இல்லை. அனைவரின் மேலும் ஏதேனும் ஒரு தவறு / குற்றசாட்டு வைக்கப்படலாம். அதன் அளவும் வீரியமும் மட்டுமே மாறுபடும்.

ஆனால், நம் வாழ்வில் நீண்ட காலமாக சில விஷயங்களை நாம் தவறாக செய்து வருகிறோம். அதுவும் அன்றாட வாழ்வில், தினந்தோறும். இதில் சிலவற்றை காணும் போது, இதை இப்படி தான் செய்ய வேண்டுமா என்ற வியப்பு பலருக்கும் ஏற்படலாம். வெகு சிலர் மட்டுமே, இதை சரியாகவும் செய்து வந்திருப்பார்கள்.

ஓரியோ!

இதை விளம்பரத்திலேயே கூற நீங்கள் கண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. ஓரியோ வகை பிஸ்கட்டுகள் பாலில் டிப் செய்து சாப்பிடுவது போல தான் காண்பிப்பார்கள். ஆனால், அதை விரல்களால் டிப் செய்யக் கூடாது. ஃபோர்க் ஸ்பூனை பயன்படுத்தி தான் சாப்பிட வேண்டுமாம்.

எலுமிச்சை சாறு!

பெரும்பாலான கடைகளிலும், வீடுகளிலும் காணப்படும் கருவி தான் இது. எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து ஜூஸ் போட இது உதவும். ஆனால், இதை யாரும் சரியாக, முறையாக முழு பயன் பெறும் படியாக பயன்படுத்துவது இல்லை. எலுமிச்சை பழத்தின் அடி பாகத்தை சிறிதளவு அறுத்த பிறகு, இதை இந்த கருவியில் வைத்து அழுத்தினால், மிகுதியான சாற்றை பெற இயலும்.

பிஸ்தா!

பிஸ்தா சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. இதை விரும்பி உண்ணும் சிலரும் வெறுக்கும் விஷயமானது, அதை உடைத்து உண்பது தான். இதன் ஓடு கொஞ்சம் கடினமானது, விரலில் நகம் இல்லாமல் இதை எளிதாக உடைக்க முடியாது. ஆனால், ஒரு பிஸ்தாவின் ஓடினை, மற்றொரு பிஸ்தாவின் ஓட்டினை கொண்டு எளிதாக உடைத்துவிடலாம்.

ப்ரூட்டி!

இப்படியான பாக்கேஜில் வரும் ஜூஸை கண்டாலே நம் அனைவருக்கும் வரும் நியாபகம் ப்ரூட்டியாக தான் இருக்கும். ஐந்து ரூபாய்க்கு கிடைத்த அந்த ஜூஸை யாரால், எப்படி மறக்க முடியும். ஆனால், இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. வெறும் லேசான அட்டை என்பதால் சில குழந்தை இதில் ஜூஸ் குடிக்கும் போது எளிதாக நசுக்கி ஜூஸை கீழே கொட்டிவிடுவார்கள். இதை தவிர்க்க, ஸ்ட்ரா குத்தும் மேல் பகுதியில் காது போல ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதை பிடித்து குடித்தால், ஜூஸ் கீழே கொட்ட வாய்ப்புகள் மிகவும் குறைவு.

உறக்கம்!

ஒன்று வெறும் தரையில் கால்களை நீட்டி நேராக படுத்துவிட வேண்டும். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இல்லை தலையணை வைத்து தான் உறங்க முடியும் எனும் நபர்கள், கால்களுக்கும் தலையணை பயன்படுத்துவதன் காரணமாக, உடல் முழுக்க சீரான இரத்த ஓட்டம் மற்றும், முதுகு வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

ஆரஞ்சு!

ஆரஞ்சு, சாத்துக்கொடி போன்றவை பலருக்கும் விருப்பமான பழம். ஆனால், அதை யாராவது உரித்துக் கொடுக்க வேண்டும், அப்போது தான் சாப்பிடுவார்கள். தானாக ஆரஞ்சை தோல் உரித்து எந்த குழந்தையும் உண்ணாத. மேலும், பெரியவர்கள் சிலருக்கு ஆரஞ்சின் தோலினை சரியாக உரிக்க தெரியாது. அப்படி சரியாக மேல் தோல் நீக்கப்படவில்லை எனில், சாப்பிடும் போசு கொஞ்சம் கசக்கும். இதை முற்றிலும் தவிர்க்க, நீங்கள் படத்தில் காணபிக்கப்பட்டுள்ளதை போல உரித்து உண்ணலாம். இது மிகவும் எளிமையான முறையாகும்.

கூலிங்!

ஃபிரிட்ஜில் வைத்தவுடன் சீக்கிரமாக கூல் ஆகவேண்டும் என்றால், கூல் ட்ரின்க் பாட்டிலை ஃபிரிட்ஜில் வைக்கும் போது, அதை ஒரு ஈரமான பேப்பரால் சுற்றி பயன்படுத்துங்கள். இது பாட்டிலும் குளிர்ச்சியை வேகப்படுத்த உதவும்.

டாய்லெட் பேப்பர்!

இன்று டாய்லெட் பேப்பர் வைக்க பல ஸ்டோரேஜ் முறைகள் வந்துவிட்டன. ஆனால், வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் முறை இதுதான். ஆனால், ஒவ்வொரு முறை, ஒவ்வொரு மாதிரி மாட்டி வைத்துவிடும் பழக்கம் அனைவரிடமும் இருக்கிறது. இதோ, டாய்லெட் பேப்பரை எப்படி மாட்டுவது சரியானது என்பதை 1891ல் வெளியான இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரெட்!

இது நிச்சயம் பலருக்கு வியப்பாக இருக்கலாம். நமது வாழ்நாள் முழுக்க நாம் இது தான் சரியான முறை என்று நினைத்து பிரெட்களை துண்டு துண்டாக அறுத்து வந்திருப்போம். ஆனால், டாப் சைடில் இருந்து அறுக்காமல், பாட்டம் சைடில் இருந்து அறுப்பது சரியான முறை. மேலும், கீழ் பகுதி மிருதுவாக இருக்கும் என்பதால் எளிதாகவும் அறுத்துவிட முடியும்.

டூத் பேஸ்ட்!

தினமும் நாம் செய்யும் தவறு இது. பல் துலக்கும் போது பெரும்பாலானோர் அளவுக்கு அதிகமான டூத் பேஸ்ட் தான் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் பிரெஷ் முழுக்க டூத் பேஸ்ட் அப்ளை செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு டீஸ்பூன் அளவுக்கு டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் போதுமானது.