நடிகை மௌனிகா இயக்குனர் பாலுமகேந்திராவுடன் 28 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.
இருவருக்கும் 30 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இணைந்து வாழ்ந்தனர். இதுபற்றி, பாலுமகேந்திரா பல மேடைகளில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
மௌனிகாவும் தன் மனைவி தான் என்றும், வேலை இன்றி இருந்த காலங்களில் பொருளாதார ரீதியாக தன்னைத் தாங்கிப் பிடித்தவள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டது. அதன் பிறகு உடல் நலக்குறைவால் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார் பாலுமகேந்திரா.
எதற்காக பாலுமகேந்திரா தன்னை விட்டு பிரிந்து சென்றார் என்பது குறித்து மௌனிகா கூறியதாவது, அதற்கான காரணம் எனக்கு இன்றுவரை புரியவில்லை. என்னை விட்டு பிரிந்து சென்றவுடன் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில், எனது வயோதிக சுமையை உன் மீது திணிக்கவிரும்பவில்லை, அதனால் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன் என எழுதியுள்ளார்.
ஆனால், இவ்வாறு செய்தது மன்னிக்க முடியாத தவறு. வயோதிகம் மட்டுமே தெளிவான காரணமாக இருக்காது என எனக்கு தோன்றியது. ஒரு வேளை அவரால் எனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று என்னை விட்டு பிரிந்து சென்றாரா என தெரியவில்லை. என்னை விட்டு பிரிந்து செல்கையில் தெளிவான விளக்கத்தை எனக்கு கொடுக்கவில்லை.
அவர் என்னைவிட்டு 2 வருடங்கள் பிரிந்து சென்றுவிட்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றும் அவரின் ஆன்மாவின் மீது எனக்கு கோபம் உள்ளது என கூறியுள்ளார்.
ஒருவேளை நான் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், முன்னணி நடிகையாகி எனது தாயின் ஆசை நிறைவேறியிருக்கும், எனது குடும்பமாக நன்றாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.