இவ்வளவு அழகாக இருந்த பெண்ணுக்கு தோழியால் வந்த வினை!

தாய்லாந்து நாட்டில் தோழி ஒருவர் சக தோழியை கொடூரமாக தாக்கியதால், அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பேங்காங்கைச் சேர்ந்தவர்கள் Pimpilai Paksee(22)-Kanjana Sinpraseat(25). நெருங்கிய தோழிகளான இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு, தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பின், கார் பார்கிங் பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தீடிரென்று வாக்குவாதம் முற்றியுள்ளது. ஏனென்றால் இரண்டு பேரில் ஒருவர் messaging app-ன் பாஸ்வேர்ட்டை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அப்போது Kanjana Sinpraseat தன்னுடைய தோழி என்று கூட பார்க்காமல் அங்கிருந்த பைக் ஹெல்மட்டை எடுத்து, Pimpilai Paksee-ஐ கண் மூடித்தனமாக தாக்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். அருகில் இருந்த சிலரிடம் உதவிக்கும் கூப்பிட்டுள்ளார். ஆனால் அவர்கள் வர மறுத்ததால், Kanjana Sinpraseat அவரை தொடர்ந்து தாக்கியுள்ளார்.

ஹெல்மட்டை வைத்து தாக்குவது, தரையில் முட்ட வைப்பது போன்று இருந்துள்ளார். இதனால் அவரின் முகத்தில் ரத்தம் வழிந்துள்ளது. அப்போது அந்த குடியிருப்புக்கு வந்த பெண் ஒருவர் இருவரின் சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதன் பின் Pimpilai Paksee மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது Pimpilai Paksee அவள் அடிக்கும் போது நான் இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன், கத்தினேன், உதவிக்கு அருகில் இருப்பவர்களை அழைத்தேன், யாரும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து Pimpilai உறவினர் ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து Kanjana Sinpraseat பெற்றோர் தங்களை வந்து நாடினர். அவர்கல் 50,000 baht தருகிறோம்.

இதை இதோடு விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் முடியாது கண்டிப்பாக காவல்நிலையத்தில் புகார் அளிப்போம் என்று கூறினோம், அதன் படி புகார் அளித்துள்ளதால், பொலிசார் Kanjana Sinpraseat-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாவும், அவருக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.