நீங்க அழகாக ஜொலிக்க வேண்டுமா? இது ஒரு ஸ்பூன் இருந்தா போதும்

மாசடைந்த காற்றாலும், புழுதியினாலும் முகத்தில் பல்வேறு சரும பிரச்சனைகள் வரும். அவையெல்லாம் போக்க நாம் தினமும் ஏதேனும் ஒரு வழியைத் தேடி அலைகிறோம். அதற்கான சிறந்த மருந்தாக விளங்குகிறது ஓட்ஸ்.

பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் ஓட்ஸ் இருக்கிறது. இந்த ஓட்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்

பாதாம்-ஓட்ஸ்

பாதாம் – 2 முதல் 3

பால் – 2 டீ ஸ்பூன்

ஓட்ஸ் – 1 ஸ்பூன்

பாதாம் பருப்பை சந்தனம் இழைப்பது போல மைய்ய இழைத்துக்கொள்ளுங்கள். ஒரு வேலை சந்தனம் இழைக்கும் கட்டை இல்லையென்றால், பொடியாக இடித்துக்கொள்ளுங்கள். அந்த பாதம் பேஸ்ட்டை பாலில் சேர்த்து, அதனுடன் ஓட்ஸ் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தட வேண்டும். பிறகு 15 – 20 நிமிடங்கள் வைத்து கழுவவும். இது முகத்தில் ஏற்பட்டிருக்கும் டேன் முற்றிலுமாக அகற்ற உதவும்.

தயிர்-ஓட்ஸ்

தயிர் – 3 டீ ஸ்பூன்

ஓட்ஸ் – 1 ஸ்பூன்

தயிருடன் ஓட்ஸ் சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் காய வைத்து கழுவினால் போதும். முகத்தில் தெரியும் பெரிய போர்ஸ் அனைத்தும் இறுக்கமாகி மூடிக்கொள்ளும்.