உல்லாசமாக இருக்கும் ஆண்களிடம் கைவரிசை காட்டும் பாலியல் தொழிலாளிகள்

மதுரை மாவட்டத்தில் உல்லாசமாக இருக்கும் ஆண்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலியல் தொழில் செய்து அதன் மூலம் நகைகள் மற்றும் பணத்தை பறித்து வரும் நபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெற்றது.

விசாரணையில் தினேஷ், கலைசெல்வி, பாண்டிவிநாயகம், விஜய்சுதர்சன், சுரேஷ்குமார், சம்பத்குமார், மணிமேகலை, மகேஸ்வரி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

இப்பெண்கள், பாலியல் தொழிலுக்கு செல்லும்போது அங்கு உல்லாசமாக இருக்கும் ஆண்களை மிரட்டி அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்து, சுமார் ரூ.17,54,000 மதிப்புள்ள 110 பவுன் தங்க நகைகளையும், சம்பவத்திற்கு பயன்படுத்திய 11 செல்போன்கள், 4 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 8 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.