பிக்பாஸ் வீட்டில் நடிகை ரித்விகா ஒரு தமிழ் பெண்ணாவது இறுதிப் போட்டி வரைக்குக்கும் தகுதி பெற வேண்டும் என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் சீசனில் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்ததால், இந்த முறையும் இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதே போன்று பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆனால் முதல் சீசனில் அனைவரும் உண்மையாக இருந்ததால், சேனலின் டி.ஆர்.பி எகிறியது.
தற்போது இருக்கும் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் நடித்துக் கொண்டிருப்பதால், எந்த ஒரு சண்டையோ, சச்சரவுகளோ இருப்பதில்லை.
இதனால் சேனலின் டி.ஆர்.பியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல டாஸ்க்குகள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நடிகர் பொன்னம்பலம், ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா போன்றோர் பிக்பாஸ் வீட்டில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பொன்னம்பலம் நீ நியாக இரு என்று ஜனனி ஐயரிடம் கூறினார்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்து அசைவுகளையும் கவனிப்பார், நீ நீயாக இரு கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெருவாய் என்று கூற, உடனடியாக அருகில் இருந்த ரித்விகா கடந்த பிக்பாஸ் சீசனில் ஒரு பெண் போட்டியாளர் கூட இறுதிப்போட்டி வரை வரவில்லை.
இந்த சீசனிலாவது ஒரு பெண் இறுதிப் போட்டிக்கு இருக்க வேண்டும். அது ஏன் தமிழ் பெண்ணாக இருக்க கூடாது என கூறினார்.
அதற்கு ஜனனி ஐயர் இங்கு சினிமாவில் கூட தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. பிக்பாஸிலாவது இதை மாற்றவேண்டும் என்று கூறினார்.