ஒரு வாரத்திற்கு இந்த ஆடிப்பெருக்கு எந்தெந்த ராசிக்கு கோடி கோடியாக அள்ளித் தரப்போகிறது?

இந்த ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் அதிர்ஷ்டம் கொட்ட போகுது என்பதை பார்க்கலாம்.

மேஷம்

சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் லமாக அனுகூலங்கள் உண்டாகும். அதேசமயம் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதை நிதானத்துடன் செய்து முடியுங்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். வீண் அலைச்சல்கள் வந்து போகும். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்தது போல் சாதகமான சூழல் வரும். எதிர்பார்த்த பண வரவால் சேமிப்புகள் உயரும். வியாபரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியில் உயர்வான பொறுப்புக்களை அடைவீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ராகவேந்திரை வழிபடுங்கள். நினைத்த காரியங்கள் கை கூடும்.

ரிஷபம்

புதிய நபர்களின் மூலம் வீண்அலைச்சல்கள் உண்டாகும். புதிதாக வேலை தேடுகிறவர்களுககு சுப செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில்இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறந்த சகோதரர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாிகளால் சில அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தன வரவுகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உடமைகளில் கொஞ்சம் கவனம் தேவை. பெமாள் வழிபாடு பிரச்னைகளைத்தீர்த்து வைக்கும்.

மிதுனம்

தந்தைவழி உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலில் கொஞசம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். சர்வதேச வணிகத்தில் ஈடுபடுவோர் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். பணியில் சக ஊழியர்களால் மன நிம்மதி கிடைக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அதன்மூலம் உங்களுடைய மதிப்புகள் உயரும். லட்சுமிதேவியை வழிபடுங்கள்.சகல செல்வாக்கும் பெறுவீர்கள்.

கடகம்

கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு மனக்கசப்புகளும் கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். செய்கின்ற செயல்களில் உங்களுடைய வேகம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். பாராட்டுக்கள் வந்து குவியும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அந்த துறை அறிவு அதிகரிக்கும். சமயக் கத்துக்கள் தொடர்புடைய கருத்தளர்களின் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக ஈடுபாடும்எண்ணங்களும் அதிகரிக்கும். வியாபாரங்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறையும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். பணியில் ஒருவிதமன குழப்பமான சூழல்களே உருவாகும். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.

சிம்மம்

செய்கின்ற செயல்களில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் கால தாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உறவினர்களிடம் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புதிதாக எதையேனும்செய்ய முயற்சித்தால் அதை நன்கு ஆராய்ந்து சிந்தித்து செயல்படுங்கள். பிறருடைய அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். நவ கிரகத்தில் உள்ள சூரிய பகவானை வழிபடுங்கள். உங்களுடைய கஷ்டங்கள் தீரும்.

கன்னி

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். அதனால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். எந்த காரியமாக இருந்தாலும் முழு தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்குவீர்கள். முக்கிய உத்தியோகப் பொறுப்பில் உள்ளவர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை ஒன்றை மிக நிதானமாகக் கையாண்டு, எந்த பிரச்னையுமின்றி மிக லாவகமாக முடித்துக் காட்டுவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலமாக சின்ன சின்ன பிரச்னைகளும் முடிவுக்கு வரும். வெளியூா பயணங்களால் நன்மை உண்டாகும். தொழில் ரீதியான லாபம் உண்டாக கொஞ்சம் கால தாமதமாகும்.

துலாம்

தொழில் தொடர்புடைய முடிவுகள் எடுப்பதில் சின்ன சின்ன குழப்பங்களுக்கு ஆளாவீர்கள். ஆனால் அதற்கு உங்களுடைய உறவினர்கள் உதவி செய்வார்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பணிகள் அனைத்தும் இனிதே நடைபெறத் தொடங்கும். வேலையிடத்தில் உயர் அதிகாரியின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளால் உங்களுக்கு நற்பெயர் உண்டாகும். தொழிலில் புதிய திட்டத்தை செயல்படுத்தி அதன்மூலம் அனவருடைய நம்பிக்கையையும் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி, நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். பொருளுாதாரத்தை உயர்த்துவதற்கான நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். முருகளை வழிபட்டு வந்தால் தொழில் சுபிட்சம் பெறும்.

விருச்சிகம்

நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு மன திருப்தியைத் தரும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் காணாமல் போகும். அவர்களே உங்களுடைய புதிய நண்பர்களாகவும் மாற வாய்ப்பு உண்டு. உங்களுக்குக் கீழ் பணிபுரிகின்றவர்கள் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். உடல் நலனில் சிறிது அக்கறை செலுத்துங்கள். வேலையில் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். எதை செய்தாலும் கொஞ்சம் கவனத்துடன் செய்து முடியுங்கள். மனதுக்குள் தேவையில்லாத வீண் கவலைகள் வந்து போகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். கால்நடைகளின் மூலமாக சுப விரயச் செலவுகள் ஏற்படும். நம்முடைய முன்னோர்களான சித்தர்களை வழிபடுங்க்ள. துன்பங்கள் நீங்கி, நல்ல பலன்கள் உண்டாகும்.

தனுசு

வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நிலம் பதிவு செய்வது தொடர்பான பணிகளில் கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். தொழிலில் வழக்கமான நிரந்தர வாடிக்கையாளர்களை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். அதனால் குடும்பத்திலும் தொழிலும் மேன்மையான சூழல்கள் உருவாகும். வீட்டில் குழந்தைகளுக்காக சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனுகூலமாக பலன்கள் உண்டாகும். இறை வழிபாடு மற்றும் வேள்விகளில் கலந்து கொண்டு, இறையருள் பெற முயற்சி எடுப்பீர்கள். நண்பர்களிடம் இதுவரை இருந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். துர்க்கா தேவியை வழிபடுவது நல்லது. மனக் கஷ்டங்கள் தீரும்.

மகரம்

கணவன், மனைவிக்கு இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழிலில் பங்கு தாரர்களின் மூலமாக பொருள் லாபங்கள் உண்டாகும். கால்நடைகள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். தொழிலை மும்படுத்துவதற்கான எல்லா சூழல்களும் உண்டாகும். மறுமணம் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவினால் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தீர்கள் என்றால் இதுவரை இருந்த இன்னல்கள் அனைத்தும் பனி போல விலகி, நன்மை உண்டாகும்.

கும்பம்

பணியிட மாற்றங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். அரசாங்கத் தரப்பிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கான முயற்சிகள் நிறைவேறும். மிக சவாலான பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். கடிதப் போக்குவரத்தின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். நினைத்த காரியத்தை முன்பு எப்போதையும் விட வேகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாலினத்தவர்கள் மூலமாக ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவ கிரகத்தில் உள்ள புதனை வழிபட்டு வாருங்கள். உங்களுக்கு மேன்மையும் புகழும் கீர்த்தியும் உண்டாகும்.

மீனம்

பொது காரியங்களில் ஈடுபட்டு அதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்க்ள எதிர்பார்த்து காத்திருந்த பணவரவு கைக்கு வந்து சேரும். அதனால் உங்களுடைய சேமிப்பும் கிடுகிடுவென உயரும். கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் மற்றவர்களின் பாராட்டையும் பெருமையையும் பெறுவீர்கள். நிர்வாகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வெளிநாட்டு பயணங்கள் மூலமாக புகழ் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்காக யாத்திரைகள் செல்ல முடிவு செய்வீர்கள். பெற்றோர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடியுங்கள். உறவினர்களின் மனநிலை அறிந்து செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்கு கிடுகிடுவென உயர ஆரம்பிக்கும். பிள்ளையாரை வழிபட்டு வந்தால் வினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.