திருமணம் முடிந்த 10 நாட்களில் தற்கொலை! மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 10 நாட்களில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த தாயப்பன்- அபிராமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடந்ததிலிருந்தே, தாயப்பன் மற்றும் அவரது பெற்றோர் கொடுமையினால் அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது.

இதனால் அபிராமி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் அவர்கள் சமாதானப்படுத்தி தாயப்பனிடம் சேர்த்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அபிராமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போயுள்ளார். இறப்பதற்கு முன்னர், வீட்டிற்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவில், தன்னுடைய இறப்பிற்கு காரணம் தாயப்பன் குடும்பமே என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தற்போது மாத்தூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.