யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவரின் பாடல் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளது.
தென்னிந்தியாவை போன்று பாடல் பயிற்சிகள், போட்டிகளில் கலந்து கொள்ளாத சிறுமி பாடும் பாடல் கேட்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
எட்டு வயதான சிறுமி பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்திரா பாடிய பாடலை தன் மழலை குரலில் பாடி அசத்தியுள்ளார்.
சிறுமிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.