போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் தெரிவு செய்யப்பட்ட முதல் 19 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க ஜனாதிபதியால் நடவடிக்கை எடுத்து வரப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு உலக நாடுகள் பலவும் அரசியல்வாதிகள் பலரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள போதும், தான் அந்த முடிவில் இருந்து மாறப்போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தூக்கிலடப் போகும் 19 பேரின் பெயர் பட்டியலில் முதல் ஐந்து பேருக்கு ஜனாதிபதி இரவு விருந்து வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூக்கிலடப்போகும் முதல் நாளன்று குறித்த மரணத் தண்டனை கைதிகளுக்கு இவ்வாறு இரவு விருந்து வழங்கப்போவதாக நம்பப்படுகின்றது.
மேலும் தூக்கிலிடப்படும் கைதிகளின் உறவினர்களுக்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதோடு, இரவு உணவின் பின்னர் விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த விருந்து உபசாரத்தின் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது.