இறை நம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும் இங்கு நிரம்பி வாழ்ந்துவருகின்றனர். அதே போல், இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் சாபம் போன்றவற்றிலெல்லாம் நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். ஆனால், அத்தகையோரெல்லாம் வாயடைத்து போகக்கூடிய அளவுக்கு இங்கே சில சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.
அதனில் ஒன்றுதான் தமிழத்தில் வாழும் குரங்கு மனிதர்கள் குறித்த கதை. ஆம், தென்காசி – வெள்ளாளன் குளம் பகுதியை சார்ந்த பெருமாள், ஆறுமுகம் என்ற சகோதரர்கள் இருவரும் குரங்கைப்போலவே உள்ளதும், அவர்கள் அத்தகைய உருவம் பெறுவதற்கு குரங்கு ஒன்று இட்ட சாபம் தான் காரணம் என்பதுவே அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அது என்னவெனில், பெருமாள் – ஆறுமுகம் சகோதரர்களின் தகப்பனார், நிலத்தில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது உணவினை எடுத்த உண்டுவிட்டு குரங்கினை அடித்துக்கொன்றுவிட்டதாகவும், அதன் காரணத்தினாலேயே இவர்கள் இத்தகைய உரு பெற்றுள்ளனர் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
விஞ்ஞான ரீதியிலாக நாம் அபரிமிதமான வளர்ச்சிகளை பெற்றபோதிலும், நம்மையெல்லாம் கடந்த சக்தியொன்று இங்கு உள்ளது என்பதுவே அப்பகுதி மக்களின் ஆணித்தரமான நம்பிக்கையாக உள்ளது.
(குரங்கு மனிதர்கள் என நாம் குறிப்பிடுவது எவர் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல ; மாறாக குரங்கினையொத்த உரு கொண்டவர்கள் என்பதனை அடையாளப்படுத்தவே )