முள்ளங்கி பருப்பு குழம்பு!

முள்ளங்கி & 2 கப்(நறுக்கியது) துவரம் பருப்பு &- 1 கப்(வேக வைத்தது) எண்ணெய் &- 4 தேக்கரண்டி கடுகு -& 1/2 தேக்கரண்டி வெந்தயம் -& 1 தேக்கரண்டி பெருங்காயம் &- 1/2 தேக்கரண்டி வெங்காயம் &- 1/2 கப் தக்காளி &- 2 பழுத்தது உப்பு &- தேவைக்கேற்ப மஞ்சள் தூள் -& 1/2 தேக்கரண்டி சீரகம் -& 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் -& 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் & -அரை தேக்கரண்டி புளி விழுது &- 2 தேக்கரண்டி கெருவேப்பிலை -& சிறிது கொத்தமல்லி தழை &- சிறிது நல்லெண்ணெய் &- 2 தேக்கரண்டி

முள்ளங்கி பருப்பு குழம்பு,mullangi paruppu kulambu,radish dal kulambu recipe tamil

கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கடுகு,வெந்தயம்,பெருங்காயம் சேர்க்கவும். பின் வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். பின் முள்ளங்கி சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள் சேர்த்து லேசாக வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். பின் அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் புளி விழுது சேர்த்து கொதிக்க வைத்து கருவேப்பிலை,கொத்தமல்லி தலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும். குறிப்பு: அனைத்து வகையான காய்கள், கீரைகள் கொண்டு இம்முறையில் குழம்பு செய்யலாம். கருவேப்பிலைக்கு பதில் துளசியும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு நெய் சேர்த்து கொடுக்கலாம். துளசி சேர்ப்பதால் சளி தொல்லைக்கு நல்லது.