மொனராகலை பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்களில் ஒருவர் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன், அதன் பின்னர் மற்றைய ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் குறித்த சந்தேக நபர் தன்னுடைய தொலைபேசியில் எடுத்த காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இன்னும் பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஆசிரியர்களின் படங்கள் வெளியாகியுள்ளன