நிறைமாத கர்ப்பிணியாக ஜெயலலிதா இருந்தாரா? சிக்கியது வீடியோ ஆதாரம்

இந்தியாவின் மறைந்த  முன்னால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார்.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா வழக்கறிஞர் பிரகாஷ், சைலஜாவுக்கும், சாரதி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால், தனக்கு பிறந்த குழந்தையை, அவர்களது குழந்தையாக வளர்க்கும்படி ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அதேநேரம், இந்த உண்மையை சைலஜா  சாகும்வரை அம்ருதாவிடம் சொல்லவில்லை.

கடந்த ஆண்டு சாரதி இறப்பதற்கு முன் அம்ருதாவிடம் ஜெயலலிதாதான் உன் அம்மா என்று கூறியுள்ளார்.  எனவே, ஜெயலலிதாதான் மனுதாரரின் தாய் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனையால்தான் முடியும் என்று வாதிட்டுள்ளார்.

இந்த வாதங்களுக்கு பதிலளித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடும்போது,  ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் கூட்டுச்சதி உள்ளது. 1980 ஆகஸ்ட் 14ல் அம்ருதா பிறந்துள்ளார். ஆனால், அதற்கு ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் நடந்த பிலிம்பேர் விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டுள்ளார்.


நிறைமாத கர்ப்பிணியாக அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும்.வேண்டுமானால் அந்த நிகழ்ச்சி வீடியோவைப் பாருங்கள் (1980 ஜூலை 6ம் தேதி நடந்த 27வது பிலிம்பேர் விழா நிகழ்ச்சியை யு டியூப்பில் டவுன்லோடு செய்ததை நீதிபதியிடம் காட்டினார்.

வீடியோவில் ஜெயலலிதா நிறைமாத கர்ப்பிணியாக இல்லை. எனவே, ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த வழக்கு தொடர்ந்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என வாதிட்டுள்ளார்.  இரண்டு தரப்பினரின் வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, இது சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது,  இறுதிக்காட்சியை நான் தான் எழுத வேண்டும் என கூறி இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கிறேன் என உத்தரவிட்டுள்ளார்.