மச்சம் தான் கொடுக்க வேண்டிய பலாபலன்களைக் கொடுத்து விட்டு, அவை அழிந்து விடும். சில மச்சங்கள், பிறக்கும் போதே நிரந்தரமாக இருக்கும். அது அழியாது, நிலைத்து நிற்கும்.
பெண்களுக்கு மச்சம் உடம்பின் இடது பாகத்திலும், ஆண்களுக்கு மச்சம் வலதுபுறமும் அமைவது நல்லது. அவற்றுக்கு தனி சக்தி உண்டு
பெண்களுக்கு இடது பாதத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால், தனக்கு ஏற்ற மணமகனை அவர் பெறுவார். வலது தொடையில் மச்சம் வாழ்க்கை வசதிகளைத் தரும்.
மோவாய் கட்டில் மச்சம் இருந்தால், அந்தப் பெண் செல்வந்தர் குடியில் பிறந்திருப்பார் என்பதைச் சுட்டிக்காட்டும்.
இடது தாடை மீது மச்சம் இருப்பவர், மிகவும் பேரழகுடன் திகழ்வார். அழகும் பண்பும் நிறைந்தவர்.
கீழ் உதட்டில் மச்சம், சகல சுக போகங்களையும் அனுபவிப்பவர்.
நாக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் இசையில் கலைவாணியாக திகழ்வார். தெய்வ பக்தி நிறைந்தவராகவும் இருப்பார்.
மூக்கின் மீது மச்சம் சிறந்த பாக்கியவதி என்பதைக் காட்டும், அவரது எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
நெற்றியில் புருவங்கள் சேரும் இடத்தில் மச்சம் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான சகல போகங்களும் கிடைக்கும்.
நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால், அவர் பெரிய செல்வந்தருக்கு மணம் முடிக்கப்படுவார்.
மார்பில் மச்சம் இருப்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதை உணர்த்துவதாகும்.
பெண்ணின் நாக்கின் அடியில் மச்சம் இருந்தால் இல்லறம் கசக்கும்.
பெண்ணின் மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், அவருக்கு கணவன் மூலமாக வெற்றி வந்து சேரும். இருப்பினும் அந்த நபருக்கு தடுமாறும் குணம் இருக்கும்.
மூக்கில் வலது பக்கத்தில் மச்சம் இருப்பது அதிக பயணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
மேல் உதட்டில் மச்சம் நல்ல கணவன் அமைவதைக் குறிப்பதாகும். மேலும் வசீகர தோற்றமும் அந்த நபருக்கு வாய்த்திருக்கும்.
இடது கன்னத்தில் கறுப்பு மச்சம் இருப்பது மிகவும் நல்லது. பெண்களின் மார்பில் வலது பக்கம் மச்சம் இருந்தால், அவர் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்.
அதே போல் ஆண்களுக்கு உள்ளங்காலில் மச்சம் இருப்பது வெளியூர் பணங்களை அதிகப்படுத்தும்.
கால் கட்டை விரலின் கீழ் மச்சம் இருந்தால், பிறரது உதவி தானாகவே கிடைக்கும்.
வலது பாதத்தில் வலதுபுறம் மச்சம் தெய்வீக யாத்திரை, புண்ணிய நதிகளை தரிசிக்கும் வாய்ப்பை பெற்றுத் தரும்.
வலது தொடையில் மச்சம் இருந்தால் தொழில் மூலமும், மனைவி மூலமும் மிகுந்த லாபத்தைக் கொண்டு வரும். இவரது மனைவி பாக்கியசாலியாக அமைவார்.
தொப்புளுக்கு கீழ் மச்சம் இருந்தால் பணம் சேரும். முதுகில் மச்சம் இருந்தால் சிறந்த அறிவாளியாக திகழ்வார்.
முதுகெலும்பின் அருகில் மச்சம் இருந்தால் அவருக்கு அரசாங்கப் பணி, பதவி உயர்வு போன்றவை அமையும்,
முதுகெலும்பின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் தீர்க்காயுளுடன் வாழ்வார்.
நெஞ்சில் மச்சம் இருந்தால், அந்த நபருக்கு திருமணத்திற்குப் பின் சொத்து சேரும்.
நாக்கில் மச்சம் இருப்பவர், கலைகள் உணர்ந்த சிறந்த அறிவாளி.
நாக்கின் அடியில் மச்சம் பெற்றவர் யோகியாக திகழ்வார்.
சுண்டு விரலில் மச்சம் இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சாதாரணமாக ஆண்களுக்கு இடது கையில் மச்சம் அமைவது நல்லதல்ல