மதுரையில் மதுபோதையில் பெற்ற தந்தையே தனது 4 வயது பெண் குழந்தையை கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய சம்பவம் அறங்கேறியுள்ளது.
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் சசி இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்லும் போது வீட்டில் தனியாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அக்கம்பக்கத்தினர் குழந்தையை கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மதுபோதையில் சசி தன் மகளை அடித்தும். கடித்தும், சூடுவைத்தும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக குழந்தையின் உடம்பில் அதிகம் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாதர் சங்கத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர், இதனையடுத்து பொலிசார் குழந்தையிடம் விசாரணை நடத்தி காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பொலிசார் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.