பிரித்தானியா அரச குடும்பத்தில் மகாராணி தூங்க சென்ற பின்னரே மெர்க்கல் தூங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியா இளவரசியான மேகன் மெர்க்கல் அரச குடும்ப விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இதனால் அவர் ஆடை விவகாரம் உட்பட பலவற்றில் மெர்க்கலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பிரித்தானியா மகாரணி இரண்டாம் எலிசபத்தின் செயலாளர்களில் ஒருவராக இருக்கு Sir William Heseltine, சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், அரச குடும்பத்தில் மகாராணி படுக்கை அறைக்கு சென்று தூங்கும் வரை யாரும் தூங்க மாட்டார்கள். ஏனெனில் அரச குடும்பத்தில் அப்படி ஒரு விதிமுறை உள்ளது.
ஆனால் இளவரசியான டாயான சில சமயங்களில் இந்த விதிமுறைகளை மீறியது உண்டு. அப்போது அவர் சில காரணங்கள் சொல்லிவிட்டு மகாராணி தூங்குவதற்கு முன்பே அவர் தூங்க சென்றுவிடுவார் என்று கூறியுள்ளார்.
இதனால் இளவரசி மெர்க்கல் ஏற்கனவே அரச குடும்ப விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை என்று கூறப்படும் நிலையில், மெர்க்கல் இதை சரியாக செய்து வருகிறாரா? இல்லையா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.