உங்கள் விரலை வைத்தே உங்களைப் பற்றிச் சொல்கிறோம்…… கேட்கத் தயாரா நீங்கள்…..?

ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் ஒன்று தான், இந்த கட்டை விரல் கைமுட்டி மடக்கும் விதம் கொண்டு ஒருநபரின் குணாதிசயங்கள், செய்கை அறியும் முறை.

இதில் நான்கு வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நீங்கள் எந்த வகை யென தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்தும் படியுங்கள்…

 

விரலை மேலே வைத்தல்
இப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாகவும், பல புதிய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுநல விரும்பி கனிவான நபர் சுற்றியிருப்பவர்களை ஈர்ப்பது போன்றவை இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும்.

விரலை உள்ளே வைத்தல்
இப்படியானவர்கள் நிறைய அரட்டை அடிப்பார்கள். ஆனால், நண்பர்களை உருவாக்கி கொள்வதில் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

துல்லியமாக பேசுவது சரியான முடிவுகள் எடுப்பது எல்லா பிரச்சனையிலும் அதன் வேர் எங்கிருக்கிறது என அறியும் திறன் ஆகியவை இவர்களின் சிறப்பாகும்.

 

விரலை வெளிப்புறம் வைத்தல்

நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்திப்பது செயலை வேகப்படுத்தும் இயல்பு ஆகியவை இவர்களின் மதிப்பை உயர்த்தும்.தோல்வியின் மீதான பயம் சில சமயங்களில் இவர்களை தைரிய முடிவு எடுப்பதைதடுக்கும்.விரலை மேல் நோக்கி உயர்த்தினால்
இப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் புத்திசாலியாகவும் பன்முக திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.ஒரே நேரத்தில் பல இடங்களில் கால் வைக்க முயல்வது இவர்களின் குணமாகும். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணமாக இருக்கும்