திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ஆந்தோசயானின், பாலி பீனால் ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும்.
- திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம்.
- நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ப்ரூக்டோஸ் சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.
- திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.
- வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும். முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.
- திராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. திராட்சையில் இருந்து தயார் செய்யப்படும் ரெட் ஒயின் இதயத்துக்கு நல்லது.