எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ. த உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த பாடசாலை மாணவியொருவர் யாழ். வடமராட்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(25) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்றைய தினம் அவரது வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். உடுத்துறை மகாவித்தியாலயத்தில் க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் அன்ரனி ஜான்சி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மாணவி எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.