மரண தண்டனை நிறைவேற்றுனர் (அலுகோசு) பதவி வெற்றிடத்திற்காக அதிகாரபூர்வமாக விண்ணப்பங்கள் எதுவும் கோரப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பித்து வருகின்றதாக தெரியவருகிறது.
சிறைச்சாலை திணைக்கள தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது;
பெண்கள் மற்றும் பட்டதாரிகளும் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். ‘எனக்கு எப்படியாவது இந்த பதவியை வழங்குங்கள்’ என விண்ணப்பங்களில் பலர் வினயமாக கோரியுள்ளனர்.எதிர்வரும் வாரத்தில் அலுகோசு பதவிக்காக அதிகாரபூர்வமாக விண்ணப்பங்கள் கோரப்படும் என சிறைச்சாலை திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்தப் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட இரண்டு பேர், பயிற்சியின் இடைநடுவில் அறிவிக்காமல் பணியிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.இந்த இருவரும் தற்பொழுது மீண்டும் தங்களுக்கு இந்தப் பதவியை வழங்குமாறு கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.